இந்தியத் தலைவர்களுடன் (37)
- பேரறிஞர் அண்ணாவுடன் கலைஞர். (1959)
- துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள் முதலமைச்சர் அண்ணாவும் கலைஞரும். (ஜூலை 30, 1967)
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும் ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங்கும். (ஆகஸ்டு 19, 1967)
- முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக டெல்லி சென்ற கலைஞர், பிரதமர் இந்திரா காந்தி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறார்கள். (மார்ச் 17, 1969)
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஜி.எஸ். பதக் அவர்களுடன் கலைஞர். (செப்டம்பர் 2, 1969)
- பிரதமர் இந்திரா காந்தியை வரவேற்று அழைத்துச் செல்கிறார் கலைஞர். (மே 21, 1972)
- பிரதமர் இந்திரா காந்தியுடன் முதலமைச்சர் கலைஞர். (மே 22, 1972)
- இந்திய ஹாக்கி அணியின் மேலாளர் பல்பீர் சிங்குடன் உரையாடுகிறார் கலைஞர். (மார்ச் 15, 1975)
- சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குடன் முத்தமிழறிஞர் கலைஞர்.
- ஜனதா தலைவர்கள் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங், சுப்பிரமணியன் சாமி, அஜித் சிங், எஸ்.ஆர். பொம்மை ஆகியோருடன் கலைஞர். அருகில் பேராசிரியர் க. அன்பழகன். (டிசம்பர் 22, 1988)
- புதுடெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் கலந்துரையாடும் கலைஞர். (மார்ச் 15, 1989)
- தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் ராஜீவ் காந்தியை சென்னை விமான நிலையம் சென்று வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் ஆளுநர் டாக்டர் பி.சி. அலெக்சாண்டர். (ஜூன் 15, 1989)
- ஆந்திர முதலமைச்சர் என்.டி. ராமாராவை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஆகஸ்டு 26, 1989)
- செய்தியாளர் சந்திப்பில் ஜோதிபாசு, வி.பி. சிங், என்.டி. ராமராவ், தேவிலால், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோருடன் கலைஞர். (ஆகஸ்டு 26, 1989)
- ஜனதா தளம் கட்சியின் தலைவர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுடன் கலைஞர், அருகில் வைகோ. (ஆகஸ்டு 26, 1989)
- அசாம் மாநில முதலமைச்சர் பிரபுல்ல குமார் மகந்தாவை வாழ்த்தி வரவேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜூன் 2, 1990)
- சென்னை விமான நிலையத்தில் பிரதமர் சந்திரசேகரை வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர், அருகில் தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. (டிசம்பர் 25, 1990)
- மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவுடன் கலைஞர். அருகில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ். (மே, 1996)
- சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்குடன் கலைஞர். (மே 14, 1996)
- பி.வி. நரசிம்மராவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (மே 15, 1996)
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் கலைஞர், அருகில் முரசொலி மாறன். (ஜூன் 8, 1996)
- பிரதமர் ஹெச்.டி. தேவ கவுடாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாருடன் சென்று வரவேற்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 25, 1996)
- குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை ஆளுநர் எம். சென்னா ரெட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோருடன் வரவேற்கிறார் கலைஞர். (செப்டம்பர் 19, 1996)
- பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவுடன் முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 19, 1997)
- முதலமைச்சர் கலைஞர் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனைப் புதுடெல்லியில் சந்திக்கிறார், அருகில் முரசொலி மாறன்.
- முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுடன் கலைஞர்.
- ஆளுநர் ஃபாத்திமா பீவியுடன் பிரதமர் ஐ.கே. குஜ்ராலை வரவேற்கிறார் கலைஞர், அருகில் மு.க. ஸ்டாலின். (செப்டம்பர் 28, 1997)
- இல்லத்துக்கு வந்த லோக் ஜனசக்தி நிறுவனர் ராம் விலாஸ் பாஸ்வானை வரவேற்று உபசரிக்கிறார் கலைஞர், (ஜனவரி 11, 2004)
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழா அஞ்சல் தலையைக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வெளியிட கலைஞர் பெற்றுக் கொள்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன், தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 4, 2006)
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் உரையாடுகிறார் கலைஞர். அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (ஜூன் 6, 2006)
- இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலை அளிக்கிறார் கலைஞர். (டிசம்பர் 8, 2006)
- நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவில் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர். (டிசம்பர் 8, 2006)
- ஐ.மு. கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார் கலைஞர். அருகில் ஒன்றிய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு. (மே 28, 2007)
- துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி கலைஞரைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். (ஜூலை 25, 2007)
- மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பிறந்த நாளன்று அவரை வாழ்த்துகிறார் கலைஞர். (ஜூலை 25, 2007)
- முதலமைச்சர்கள் மாநாட்டில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியுடன் கலைஞர். (பிப்ரவரி 1, 2011)
- ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி ஆதரவு கோரி கலைஞரைச் சந்திக்கிறார். (ஜூன் 30, 2012)